தி.மலை மாவட்டம் செங்கம் இனியன் செஸ் ஃபவுண்டேஷன் சார்பில் மகாலட்சுமி அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி சிகரம் பன்னாட்டு பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு சிகரம் பன்னாட்டு பள்ளியின் தாளாளர் பேராசிரியர் வணங்காமுடி, தமிழ்நாடு மாநில சதுரங்க கமிட்டியின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் ராஜேஷ், கிருஷ்ணாபுரம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தி.மலை மாவட்ட சதுரங்க கமிட்டியின் பொருளாளர் தமிழரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 9 வயது, 11 வயது, 15 வயது உட்பட்ட மாணவர்கள் மாணவியரகளுக்கு சதுரங்க விளையாட்டு போட்டி தி.மலை மாவட்ட சதுரங்க கமிட்டியின் துணைத் தலைவர் சிங்காரவேலு, ஜாகீர், இணை செயலாளர் ராஜசேகரன், செயலாளர் பாலமுருகன், இணை செயலாளர் வேலாயுதம் , ஆகியோரில் மேற்பார்வையில மாணவர்கள் சிறப்பாக விளையாடினர். இவற்றில் ஏழு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு இனியன் பவுண்டேஷன் சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது. சிகரம் பன்னாட்டு பள்ளியின் முதல்வர் காயத்ரி, தலைமையாசிரியர் சண்முகம், ஆசிரியர் ஸ்ரீதர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.
60
You must be logged in to post a comment.