கீழக்கரையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம்……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இன்று 18.8.2020 மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்திற்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் வள்ளல் சீதக்காதி சாலையில் ஜும்மா பள்ளி அருகில் நடைபெற்றது. 

இப்போராட்டத்தில்  நகர் தலைவர் காதர் முகைதீன் தலைமையில் மாநில பொருளாளர் ரியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. ஆரம்பித்த இந்த ஆர்ப்பட்டதில் நகர தலைவர் கண்டன உரையாற்றினார்.

இதில் திரளான மாணவர்கள் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு

உதவிக்கரம் நீட்டுங்கள்..