Home செய்திகள்உலக செய்திகள் தவறவிட்ட செல்போனை முப்பது நிமிடத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை..

தவறவிட்ட செல்போனை முப்பது நிமிடத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை..

by Abubakker Sithik

கடையநல்லூர் பகுதியில் தவறவிட்ட செல்போனை 30 நிமிடத்தில் காவல்துறையினர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ். இவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கடையநல்லூர் வந்த போது வழியில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது தொலைந்து விட்டதாகவும், தொலைந்த செல்போனை மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜா அறிவுறுத்தலின் படி, சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரி மற்றும் காவலர் ராஜா ஆகியோர் இணைந்து தொலைந்த செல்போனை 30 நிமிடத்திற்குள் மீட்டு காவல் ஆய்வாளர் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொலைபேசியை பெற்றுக் கொண்ட நபர் தென்காசி மாவட்ட காவல் துறைக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!