
நேற்று (09-01-2017) 2017ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ (CBSE) தேர்வு கால அட்டவனை வெளியிடப்பட்டது. பொதுவாக மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பம் ஆகும் இந்த தேர்வு இந்த முறை பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற இருப்பதால் மார்ச் 9ம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது. தேர்வுகள் மார்ச் 9ம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 29 தேதி நிறைவடைகிறது.
கடந்த வருடம் சுமார் 10,65,179 மாணவர்கள் 10,093 பள்ளிகள் மூலம் தேர்வில் பங்கேற்றார்கள் இந்த வருடம் அதிகமாக 10,98,420 மாணவ மாணவிகள் 10,677 பள்ளிகள் மூலம் பங்ககேற்கிறார்கள். இத்தேர்வில் இந்திய மத்திய அரசாங்க பாட வழிமுறையை தேர்ந்தெடுத்தவர்கள் உலகத்தின் பல பகுதிகளில் இருந்து பரிட்சையில் பங்கெடுப்பது குறிப்பிடதக்கது. இந்த இறுதித் தேர்வு மேற்படிப்பு படிப்பதற்கான மாற்றத்தை வழிவகுக்கும் முக்கிய தேர்வாகும். இத்தேர்வில் மாணவ மாணவிகள் வெற்றி பெறுவதற்கு சுற்றுபுற சூழ்நிலையும் பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மாணவர்கள் கவனத்திற்கு:-
- இரவில் அதிக நேரம் கண் விழிப்பதை தவிக்கவும்..
- அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துங்கள்.
- பாடத்தில் சம்பந்தமில்லாத காரியங்களில் பரிட்சை காலங்களில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
- நேரத்தையும் பாடத்தையும் நிதானமாக திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
- நன்றாக புரியும் பாடத்தை வரிசைப்படுத்தி படியுங்கள்.
- அனைத்து பாடங்களும் பரிட்சைக்கு முக்கியம் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
- புரியாத பாடங்களை பரிட்சை ஆரம்பம் ஆகும் சில நாட்களுக்க முன்னரே படித்து புரிந்து கொள்ளுங்கள் தவறும்பட்சத்தில் தவிர்த்து விடுங்கள் கடைசி நேர ஈடுபாடு மனக் குழப்பத்தை உண்டாக்கும்.
- அரட்டைகளையும் கேளிக்கைகளையும் பரிட்சை முடியும் வரை தவிர்த்து கொள்ளுங்கள்.
- பரிட்சை தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு படிப்பதை நிறுதித்தி விட்டு மனதை அமைதி படுத்துங்கள்.
- பரிட்சை முடிந்த உடன் அடுத்த மாணவர்களுடன் நீங்கள் எழுதிய பதிலை ஒப்பிடாதீர்கள்.
- உங்களுடைய குறிக்கோள் நீங்கள் மேற்படிப்பு படிக்க விரும்பும் படிப்புக்கு ஏற்ப மதிப்பெண்ணாக இருக்கட்டும் முதற் மதிப்பெண் என்பது அடுத்ததாக இருக்கட்டும்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:-
- பரிட்சை காலங்களில் புத்துணர்வு கொடுக்கும் உணவுகளை வழங்குங்கள்.
- உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் கொடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.
- உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.
- பரிட்சை காலங்களில் பிள்ளைகளுக்கு தொந்தரவு அளிக்கும் அளவுக்கு டிவி பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.
- படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை வீட்டில் உருவாக்கி கொடுங்கள்.
- உறவினர் மற்றும் நண்பர்களுடான சந்திப்பு விசேஷம் போன்றவற்றை பரிட்சை முடியும் காலம் வரை தள்ளிப் போடுங்கள்.
- மொத்தத்தில் பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்க கூடிய அனைத்து விசயங்களையும் தவிர்த்து கொள்ளுங்கள்.
ALL THE BEST……
You must be logged in to post a comment.