ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
Category:
நகராட்சி
செய்திகள்கவுன்சிலர்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்பிரச்சனைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
செய்திகள்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்மருத்துவம்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
கீழக்கரை நகராட்சி நாய்களைப் பிடித்து நோய் தொற்று பரிசோதனை !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 04 ல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்பு கிளினிக் எதிர்புற பகுதியில் 8 நபர்களை நாய் கடித்தது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் அடிப்படையில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 7 நாய்கள் பிடிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான பள்ளமோர்க்குளம் ABC மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் நாய்களுக்கு ரேபீஸ் நோய் தொற்று ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி சார்பாக வேண்டுகோள் விடப்பட்டது . அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் நேரில் பார்வையிடப்பட்டு இராமநாதபுரம் மண்டல இணை இயக்குநர் கால்நடை மருத்துவதுறை அலுவலர் முன்னிலையில் ரேபீஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் உணவு வழங்கப்பட்டு (10 நாட்கள்) கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது . இதில் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா கால்நடை மருத்துவர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அராஜக போக்கை கையாளும் கீழக்கரை நகராட்சி.. மக்களை அச்சுறுத்தும் பணியில் நகராட்சி மேலாளர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் விதிக்கப்பட்டு வரும் சட்டவிரோதமான வரிவிதிப்பை கண்டித்து கடந்த 18/03/2019 அன்று அனைத்து ஐக்கிய ஜமாத் சார்பாக நிரந்தரமான புதிய ஆணையர், சொத்து வரிக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த முடிவுகள் அனைத்து முறையான ஆவுணங்கள் மற்றும் முகாந்திரத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் வீட்டு வரி சம்பந்தமான வேறு வழக்குக்கு நீதிமன்றம் 5000/- அபாரதம் விதித்த செய்தியின் நகலை எடுத்து மக்களை பயமுறுத்தும் நோக்கில் நகராட்டி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது சம்பந்த மக்கள் டீம் அமைப்பின் காதர் கூறுகையில், ” இது முழுக்க முழுக்க நகராட்சி நிர்வாத்தின் அராஜக போக்காகும், மேலும் பொதுமக்களின் உரிமைகளை மீறுவதாகவும், அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கப்பட கூடியது. நகராட்சி நிர்வாகம் எவ்வகையான அச்சுறுத்தல் நடவடிக்கை எடுத்தாலும், சட்ட ரீதியாக சந்திக்க கீழக்கரை மக்கள் தயாராக உள்ளனர்” என்று கூறி முடித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுகாதார சீர்கேட்டின் உச்சக்கட்டத்தில் கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி – அரசாணையை ஊதாசினப்படுத்திய நகராட்சி நிர்வாகம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் நிலவி வரும் அவல நிலையை கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பல் வேறு அமைப்புகள் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு மனுக்கள் பதிவு செய்தனர். ஆனால் அதற்கும் முறையான நடவடிக்கை எடுக்காததால் தகவல் அறியும் உரிமை ஆணை மூலமாக நீதிமன்றம் மூலமாக நகராட்சி அலுவலகத்தை நேரடியாக ஆய்வு செய்ய அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் சட்ட விழிப்புணர்வு இயக்கம் உறுப்பினர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் அவல நிலைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பது அங்கு வந்திருந்தவர்கள் கூறிய கருத்துக்களே சாட்சியாகும். உதாரணத்திற்கு நோயாளிகளுக்கு மருந்துகளை முறையாக விளக்கி வழங்குவதில்லை, அனைத்து மருந்துகளையும் ஒரு பையில் குப்பையை போல் கொட்டி கொடுப்பது, அசுத்தம் நிறைந்த பிணவறை, விபத்துக்குள்ளாகி பிரேத பரிசோதனைக்கு வரும் உடல்களில் இருந்து பிரிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த துணிகள் எந்த சுகாதாரமும் இல்லாமல் வெளி பகுதிகளில் தூக்கி எறியப்பட்டிருந்து, அப்பகுதியே அருகில் செல்ல முடியாத அளவு துர்நாற்றம். (கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
அதேபோல் நகராட்சி பொதுத்தகவல் அலுவலர் நம்முடைய ஆய்வின் போது முறையான ஒத்துழைப்பினை வழங்காமலும், ஆய்வு செய்ய கோரிய கோப்புகளை வழங்காமலும் ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டனர்.
இது சம்பந்தமான நமது புகார் மனு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியின் மெத்தனப் போக்கு… ஹமீதியா தொடக்கப்பள்ளி அருகாமையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே மாறிவிட்டது, நகராட்சியின் மெத்தனப் போக்கால். கடந்த பல வருடங்களாக தனியார் நிறுவனத்தால் சேவை நோக்கில் செய்து வந்த சுகாதார பணியையும் நிறுத்திவிட்டார்கள். அரசாங்கமே தன் பணியை செய்வது பாராட்டுக்குரியது, ஆனால் கீழக்கரையில் நிலைமை தலைகீழ், சுகாதாரம் என்பது சீர்குலைந்து கொண்டே வருகிறது.
மேலே நீங்கள் காணும் புகைப்படங்கள் சிறுவர்கள் அதிகமாக செல்லும் ஹமீதியா தொடக்கப்பள்ளி பகுதி. இது போன்ற இடங்களே கவனிப்பாரற்று கிடக்கும் பொழுது வேறு இடங்களைப் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. என்று நகராட்சி உறக்கத்தில் இருந்து விழிக்கிறது என்று பார்ப்போம்.
செய்தி:- J.சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மழையால் கீழக்கரை சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமா நகராட்சி??
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்து பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரம்ப்பட்டு வருகிறார்கள்.
நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இன்று (ஞாயிறு) விடுமுறை என்பதால் அடுத்த நாள் சாலையை சரி செய்வதாக பதில் தருகிறார்கள். இராமநாதபுரத்தில் மழைக்காக செய்த முன்னேற்பாடு பணிகள் கீழக்கரைக்கு பொருந்தாதா??? அல்லது பணியாளர்கள் விடுமுறை கழிந்து வரும் வரை பொது மக்கள் அவதிப்பட வேண்டுமா??.
தகவல்:- மக்கள் டீம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லானியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில் அதிகரிக்கும் மணல் கொள்ளை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் ரோட்டில் மேலப்புதுக்குடி அருகே அனுமதியில்லாமல் மணல் கொள்ளையடிப்பதாக அங்குள்ள மக்கள் கூறுவதை அறிந்து கொள்ள அங்கு சென்ற பொழுது, 30 அடி அகலம், ஆறடி பள்ளத்தில் கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் அள்ளப்பட்டு அங்குள்ள பல பனை மரங்கள் வீழ்ந்தும், இன்னும் பல வீழக்கூடிய நிலையிலும் இருந்தது வேதனையான காட்சியாக இருந்து. நீங்கள் காணும் புகைப்படம் அனைத்தும். 10/09/2018 அன்று காலையில் எடுக்கப்பட்டது.
அப்பகுதியில் பிள்ளையார் கூட்டம் ஊரணியில் தண்ணீர் பிடிக்க வந்தவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் காட்டியது போல் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற பொழுது மண் அள்ளுவதற்கு சாட்சியாக பொக்லைன் இயந்திரம் சாட்சியாக நின்றது.
அங்குள்ள பனை மரங்கள் தன் வேர்களை இழந்து தண்ணீர் வளத்தையும் இழந்த வண்ணம் காட்சியளித்தன. அரசு அதிகாரிகளுக்கு இந்த ஈவு இரக்கமற்ற மிருகங்கள் மீது கண் படுமா?? இயற்கை வளம் காக்கபடுமா??
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாமானியனும் சென்று மகிழ சென்னையில் ஒரு வணிக வளாகம் “ஸ்டார் மால் (STAR MALL)”
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சென்னை மாநகரில் தினமும் மகி பிரமாண்டமான வணிக வளாகங்களும், உணவகங்களும் திறந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது போன்ற இடங்களுக்கு நடுத்தர மனிதர்கள் செல்வதற்கே அஞ்சும் வகையில் ஆடம்பரமும், பிரமாண்டமுமாக இருக்கும். ஆனால் சாமானிய மனிதனும் வணிக வளாகம் செல்லும் வகையில் திறக்கப்பட இருக்கும் வளாகம் தான் “ஸ்டார் மால்”.
இந்த வணிக வளாகம் நுங்கம்பாக்கம் சென்னை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் 4000 சதுர அடியில் அனைத்து வாகனங்களும் சிரமம் இல்லாமல் நிறுத்தும் வசதியுடன் அமைக்ப்பட்டுள்ளது. இங்கு அனைத்து பொருட்களும் குறைந்த அளவில் எல்லா விதமான கம்பெனி பொருட்களின் கடைகளும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் திறப்பு விழா சலுகையாக ரூ.15,000/-கு மேல் பொருட்கள் வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களில் மூன்று நபர்களுக்கு 55 இஞ்ச், 40இஞ்ச் மற்றும் 32இஞ்சி விலையுர்ந்த எல்இடி டிவிக்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தின் திறப்பு விழா வரும் 14/09/2018 அன்று வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட உள்ளது.
—————————————————————————————————————————————————————————
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன?
ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).
இரத்தம் சீர் கேடு அடையுமா ?
எந்த நோய் வந்தாலும் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் இரத்தத்தை பாதிக்கிறது. ஆயுர்வேதத்தில் பித்தத்தின் மறு உருவாக இரத்தம் கருதப்படுகிறது. அதிகமான நோய்களுக்கான காரணம் இரத்தத்தில் உள்ள கோளாறுகள். உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகள், அமில காரதன்மையில் ஒரு சம நிலை இல்லாதது, அதிகமான வேதி பொருட்கள் அடங்கிய மருந்துகள், எண்ணை தேய்த்து குளிக்காதது, இரவு கண் விழிப்பு என்று பல்வேறு காரணத்தால் இரத்தம் மென் மேலும் கேடு அடைகிறது. அதை தான் கரும் பித்தம் தான் அநேக நோய்க்கு காரணம் என்று யுனானி மருத்துவம் சொல்கிறது ,பித்தம் மிகுந்த நோய்களே இரத்தம் கேடு அடைய செய்யும் காரணம் என்று ஆயுர்வேத மருத்துவமும் ,சித்த மருத்துவமும் வழி மொழிகிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளே பெரிய நோய்க்கு காரணம். நிண நீர் ஓட்ட பாதிப்பே பல கட்டிகளையும், கேன்சர் போன்ற நோய்களையும் உறுவாக்குகிறது, வளர்சிதை மாற்றமே (மேட்டபாலிக் நோய்கள் ) பெரிய நோய்களை உருவாக்குகிறது. உயிர் சக்தி இல்லாத-எதிர்ப்பு சக்தியில்லாத இரத்தமே ஆட்டோ இம்யூன் நோய்களான சொரியாசிஸ், முடக்கு வாதம், தைராய்ட்,மேலும் பெயர் தெரியாத நோய்களை உருவாக்குகிறது.
ஏன் இரத்தம் வெளியேற்ற வேண்டும் ?
மனிதனுக்கு சராசரியாக ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது .120 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக இரத்தம் உருவாகி கொண்டே இருக்கிறது. கெட்டுபோன இரத்தத்தை சுத்தம் செய்ய நமது கழிவு உறுப்புகள் சிறுநீரகம் ,ஜீரண உறுப்புகள் முக்கியமாக கல்லீரல் ,நுரையீரல் ,தோல் போன்ற உறுப்புகள் பிறந்தது இடைவிடாது வேலை செய்து கொண்டே இருக்கிறது. இந்த முக்கிய உறுப்புகளே கழிவு நீக்கம் செய்யாமல் பாதிப்படையும் போது ,வேலை செய்ய சிரமப்படும் போது கெட்டுபோன இரத்தம் கழிவு நீக்கம் எப்படி நடக்கும்?. இயற்கையான முறைபடி கழிவு நீக்கம் நடை பெறாத போது அதற்கென்று முறையாக இரத்தம் வெளியேற்றுவதால் –ஹிஜாமா தெரபி செய்வதால் பெரிய நோய்களையும் நாள்பட்ட நோய்களையும் குணமாக்க முடியும்.
இத்தகைய குணம் உள்ள ஹிஜாமா மருத்துவம் கடந்த வருடம் சில வாரங்கள் மேலத் தெருவில் செய்யப்பட்டது. தற்பொழுது கீழக்கரை வடக்குத் தெருவில் ஹிஜாமா மருத்துவத்தில் பட்டய படிப்பு படித்தவர், இந்த சிகிச்சை வழங்குகிறார். விரும்புவோர் தொடர்புக்கு :-
முஹம்மது சிராஜுதீன்.
மாஸ்டர் ஆஃப் டிப்ளமோ இன் ஹிஜாமா
இடம் – வடக்கு தெரு (வண்ணான் கோயில் எதிரில்)
தொடர்புக்கு:- – 8870156885
———-////:/——————-///::—————-
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையும் சுகாதாரமின்மையும் நகமும் சதையும் போல் பிரிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. எத்தனை களப் பணியாளர்கள் நியமித்தாலும், சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான முஸ்லிம் பஜார் ரிஃபாய் தைக்கா கிட்டத்தட்ட சாக்கடையில் மூழ்கும் நிலையில் உள்ளது. எத்தனையோ தெருக்களுக்கு வலிய சென்று சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்கள், தேவையுடைய இந்த தெருவை கவனிப்பார்களா??
இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்குதான் என்று அத்தெரு மக்கள் கூறுகிறார்கள். அந்த இடத்தின் உரிமையாளரிடம் பல முறை கூறியும் எந்த பலனும் இல்லை என்கிறார்கள் அத்தெருவாசிகள். நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.
—————————————————-
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை என்றாலே நினைவுக்கு வரும் பாரம்பரிய உணவுகள் சீப்பணியாரம், வெள்ளாரியாரம், பொறிக்கஞ்சட்டி கொலுக்கட்டை, தொதல், கலகலா, அச்சு பணியாரம், குறிச்சா, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற உணவுகளும்தான். இதில் குறிச்சா போன்ற திண்பண்டங்கள் இளைய தலைமுறைக்கு என்ன என்பதே தெரியாது.
ஆனால் இன்றும் பாரம்பரிய சுவை மாறாமல் முழு நேர வணிக நோக்கத்துடன் இல்லாமல் சுவை அறிந்து கேட்பவர்களுக்கு வாய்க்கு சுவையாக இனிப்பு வகைகளை செய்து வருகிறார் நடுத்தெருவைச் சார்ந்த MUV.முகைதீன் இபுராஹிம் என்பவர். இவர் வீட்டிலேயே பிறரை வேலைக்கு அமர்த்தாமல் குடும்பத்தார் உதவியுடன் தானே அனைத்து உணவுகளையும் செய்து விற்பனை செய்து வருகிறார். இதில். குறிச்சா எனும் உணவை மக்களே மறந்த நிலையில் இன்றும் அதன் சுவை மாறாமல் ஆர்டரின் பேரில் செய்து வருகிறார் என்பது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும்.
உங்களுக்கு தேவையான பொருட்களுக்கு 90920 90305 / 96776 40305 / 98846 40305 / 94433 58305 என்ற எண்ணுக்கு அழைத்து கூறினால், உங்கள் வீட்டிற்கே சுவை மாறாமல் கொண்டு வந்து தருகிறார்கள். கீழக்கரை திண்பண்டங்களை உண்மையான சுவையுடன் சுவைத்து பாருங்களேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூய்மை இந்தியா திட்டம் கீழக்கரைக்கு விதி விலக்கா?? நாறி கிடக்கும் தெருக்கள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகராட்சி இருந்தும், பகுதி நேர ஆணையர் போலவே அங்குள்ள செயல்பாடுகளும் முறையில்லாத வகையில் செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகராட்சியில் சுகாதாரம் என்பது ஒரு பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.
கீழக்கரையில் சொக்கநாதர் ஆலயம் எதிர்புரம், மேலத்தெரு செய்யிதினா அபுபக்கர் சித்திக் பள்ளி வாசல் பகுதி, வடக்குத் தெரு CSI பள்ளி பகுதி, கொந்த கருணை அப்பா பள்ளி செல்லும் வழி, புதுக்குடி, வண்ணாங்குடிருப்பு, தட்டாந்தோப்பு, சதக்கதுல்லா அப்பா வளாகம் பின்புறம் மற்றும் இன்னும் பிற பகுதிகளிலும் குப்பை கிடங்குகள் நிறைந்த பகுதிகளாக காட்சியளிக்கின்றது.
நமது பாரத பிரதமரின் தூய்மை இந்தியா என்ற வார்தை முழக்கம் ஏட்டு சுரக்காய் போல் நகராட்சின் முன்பு கம்பீரமாக காட்சியளிக்கின்றது . இந்த தூய்மை இந்தியா என்ற முழக்கம் எப்பொழுது நடைமுறைக்கு வர போகின்றது என்பது தான் சமூக ஆர்வலர்களின் ஏக்கம்.
அதே சமயம் தனி மனிதன் ஒழுக்கம் இல்லாதது தான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை வைத்தாலும், நகராட்சியும் தான் செய்ய வேண்டிய பணியை முழுமையாக செய்தால் நிச்சயம் மாற்றம் வரும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைத்து பணிக்கும் நகராட்சி தேவையில்லை – களத்தில் இறங்கிய அல் அமீன் சகோதரர்கள் ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று (30/07/2018) சில மணிக்கு முன்னால் சாக்கடையில் கலக்கும் குடிநீர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை பார்த்தவுடன் கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் அமைப்பைச் சார்ந்த சகோதரர்கள் உடனடியாக நகராட்சியை எதிர்பார்க்காமல், கையில் இருந்து செலவு செய்து புதிய குழாய் பொறுத்தியுள்ளார்கள்.
மேலும் இது சம்பந்தமாக கூறிய அல் அமீன் அமைப்பு உறுப்பினர் ஒருவர், தற்காலிமாக குடிநீர் வீணாவதை தடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் நிரந்தரமாக தீர்வு காணும் வண்ணம், வாருகால் மூடியை சிமெண்ட் வைத்து மூடி, நல்ல தரமான இரும்பு குழாய் பதிக்க முயற்சி செய்துள்ளோம் என்றார்.
உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு கண்ட அல்அமீன் சகோதரர்களின் பணி நிச்சயமாக பாராட்ட பட வேண்டிய ஒன்று.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் வீணாகும் குடிநீர் – சாக்கடையுடன் கலக்கும் அவலம்.. வீடியோ பதிவு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை தெற்குத் தெவில் இருந்து வடக்குத் தெருவை நோக்கி செல்லும் முச்சந்தி சந்திப்பில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிய வண்ணம் உள்ளது. அவ்வழியாக தினமும் பல நகராட்சி ஊழியர்கள் கடந்து சென்ற வண்ணம்தான் உள்ளனர். ஆனால் யாரும் இதை சீர் செய்ய முயற்சி எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.
அப்பகுதி மக்களும் தங்களால் இயன்ற அளவு தண்ணீர் வீணாவதை தடுக்க முயற்சி செய்தாலும், தண்ணீர் சாக்கடையில் கலந்த வண்ணம்தான் உள்ளது. அதே சமயம் பொதுமக்களும் வாருகால் மூடிகளை திறந்து குப்பைகளை கொட்டும் பழக்கத்தை விட்டொழித்தாலே சுகாதாரக் கேட்டில் இருந்து மீளலாம். சுகாதாரத்திற்கு தனி மனித ஒழுக்கமும் மிக அவசியம் என்பதை பொதுமக்களும் உணர வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒரே நாளில் சீராக்கப்பட்ட குப்பை மேடு, கீழக்கரை நகராட்சிக்கு ஒரு சபாஷ்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை வடக்குத் தெரு மருத்துவமனைகள் அதிகமாக இருக்கும் சாலையில் இருந்து வண்ணாந்தெரு வழியாக கடைத் தெருவுக்கு செல்லும் வழியில் குப்பைத் தொட்டி கவிழ்க்கப்பட்டு குப்பைகள் வெளியில் சிதறி சுகாதாரக் கேடு விளைவிக்கும் வண்ணம் இருந்தது. இ்ந்நிலையில் இது சம்பந்தமான புகைப்படங்கள் அத்தெரு வாட்ஸ்அப் தளத்தில் பகிரப்பட்டது.
அத்தகவலை அத்தளத்தின் மூத்த உறுப்பினர் நசுருதீன் வடக்குத் தெரு அரசியல் பிரமுகர் இம்பாலா சுல்தான் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். உடனே அவரும் நகராட்சி ஊழியரை தொடர்பு கொண்டு அதற்கான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் விண்ணப்பதை ஏற்று இன்று (23/07/2018) காலையே அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு சீர் செய்யப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக இம்பாலா சுல்தான் கூறுகையில், இந்த இடத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது முதல் தடவை அல்ல, இது போல் இதற்கு முன்னரும் நடந்துள்ளது, காரணம் இங்கு குப்பை சோிப்பதற்காக வைக்கும் தள்ளு வண்டிகள் மற்றும் தொட்டிகளை சேதப்படுத்தப்படுகிறது. தற்சமயம் புதிதாக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியின் சக்கரமும் சேதப்படுத்தப்பட்டு கவிழ்க்கப்பட்டுள்ளது. நாம் பிரச்சினைகளுக்கு நகராடசியை நாடும் அதே சமயம் ஒவ்வொருவரும் அவரவர் பகுதியின் சுகாதாரத்தைப் பேணுவதில் கவனம் செலுத்துவதும் மிக அவசியம் ஆகும். மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் சேதமடைந்த குப்பைத் தொட்டியை சரி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அதற்கான நிதிகள் முறைப்படி ஒப்புதல் கிடைத்தவுடன் மாற்றப்படும்” என வருத்தத்துடன் கூறினார்.
ஒவ்வொரு தனி மனிதனின் ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கத்திற்கு மிக அவசியம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது.
கீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளால் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் என அடுக்கி கொண்டே போகலாம். சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஒருவர் கீழக்கரையில் வீடுகளின் சுத்தத்தை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்கள் சுகாதாரமானவர்களா?? என்ற கேள்வியை பொதுதளங்களில் எழுப்பியருந்தார். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி. தீர்வு காண இயலாத அரசு அதிகாரிகளை “இனி வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.
கீழக்கரையில் தினமும் பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளனர். டெங்கு காய்ச்சல் வந்தாலே பரிசோதனைக்கு இராமநாதபுரம் அல்லது மதுரை செல்லும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த காய்ச்சலால் பல நடுத்தர மக்கள் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் வைத்தியம் பார்க்கும் சூழலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இன்னும் கீழக்கரை மக்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய தவறான புரிதலும், அறியாமையுமே பொருளாதாரத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த வாரம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சார்ந்த பரக்கத் அலி என்பவரின் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பல ஆயிரங்கள் செலவு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “என்னுடைய குழந்தைகளுக்கு அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் வருகிறது. இதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்ட பொழுது, கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது .உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஊரை மாற்றுங்கள் என்றார். இது விளையாட்டாக சொல்லப்பட்டாலும், இதுதான் இன்றைய கீழக்கரை நிலவரம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மறுக்க முடியாது, ஆனால் ஊரை விட்டு போக முடியாது, ஆகையால் என் வீட்டை விட்டு சுகாதாரமான இடத்திற்கு மாறலாம் என எண்ணியுள்ளேன்” என வருத்தத்துடன் கூறி முடித்தார்.
நகராட்சி நிர்வாகம் சுகாதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டுமல்ல, கீழக்கரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே சமயம் நகராட்சியின் அலட்சிய போக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கமும், சமூக பொறுப்பும் மிகவும் அவசியமானதாகும். இந்த விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில் அதிக அளவிளான சுகாதார பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
மேலே உள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வழி பாதையாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் கேட்கிறார் பள்ளியின் தாளாளர்.
சிந்திப்போம்!!! செயல்படுவோம்!!
போட்டோ:- மக்கள் டீம், சமூக வலைதளம் ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் கிட்டதட்ட நாற்தாயிரத்திற்கு மேலான மக்கள் 21 வார்டுகளில் வசித்து வருகின்றனர். அதே போல் கீழிக்கரையில் மின்சார வினியோகமும் விடுமுறை மற்றும் பெருநாள் காலங்களில் அதிகமாக இருக்கும். இதை அடிப்படையாக வைத்து மாதந்தோறும் பராமரிப்பு என ஒரு மின் தடை உண்டு, ஆனால் எந்த வகையான பராமரிப்பு என்று யாரும் புரிந்து கொள்ள முடியாது காரணம் அதையும் தாண்டி பல நாட்கள் அறிவிக்கப்படாத மின் வெட்டுக்கள் உண்டாகும். ஆனால் பொதுமக்கள் மத்தியில் எப்பொழுதுமே இது மின்சார சேமிப்புக்கான தடை என்றே கூறப்படுவதுண்டு.
ஆனால் அதை பொய்ப்பிக்கும் வகையில் சில இடங்களில் பகல் நேரத்திலும் தெரு விளக்குகள் எரிந்த வண்ணமே உள்ளது. ஆனால் பல முக்கிய தெருக்கள் வெளிச்சம் இல்லாமல் இருளடைந்து கிடக்கிறது. . கீழக்கரை மின்சார வாரியம் இது போன்ற வீண்விரயங்களை குறைத்து இருண்டு கிடக்கும் பகுதிகளுக்கு விளக்குகளை பொருத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாய்களுக்கும், கால்நடைகளுக்கும் கூடாரமாக மாறி வரும் கீழக்கரை தெருக்கள்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகர் வீதிகளில் உல்லாசமாக திரியும் தெரு நாய்களும், ஒய்யாரமாக சுற்றி வரும் கால்நடைகளும் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன்பு தெரு நாய்களை அப்புறப்படுத்த மனுக்கள் கொடுக்கப்பட்டு சில நாட்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டது, பின்னர் மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
அதே போல் கீழக்கரை நகர் முழுதும் உள்ள ரோடு மற்றும் வீதிகளில் ஒய்யாரமாக சுற்றித் திரியும் மாடுகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த கால்நடைகள் சாலைகளில் ஏற்படுத்தும் தடங்கலால் பல நேரங்களில் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகிறது.
அதே போல் வேலை நேரங்களில் சாலைகளில் செல்லும் கால்நடைகளால் சாலையோர வியாபாரிகள், வியாபார ஸ்தலங்களில் வைத்திருக்கும் பொருட்களும் நாசப்படுத்தப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலை நடுவில் கால்நடைகள் படுத்து இருப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.
இந்த விசயத்தில் கீழக்கரை நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழக்கரை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி மூலம்:- மக்கள் டீம் & சட்ட விழிப்புணர்வு இயக்கம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ஈத் பெருநாளன்று சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே மோதல் – இருவர் படுகாயம்..பெருகி வரும் வன்முறை கலாச்சாரம்….
by keelai
written by keelai
கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகலில் சிறுமிகளை ஈவ் டீசிங் செய்த பிரச்சனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16/06/2018 அன்று ஈத் பெருநாளன்று பிற்பகலில் சேரான் தெருவை தேர்ந்த முஹம்மது நபீல் என்பவர் தன்னுடைய 12 வயது சகோதரியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பழைய மீன் கடை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கஸ்டம்ஸ் தெருவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் முஹம்மது நபீலின் சகோதரியிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட முஹம்மது நபீலை இரும்பு ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனையடுத்து இரண்டு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ரம்சித் சில்மான் மற்றும் முஹம்மது நபீல் படுகாயம் அடைந்து இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது ரம்சித் சில்மான் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கீழக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் ஊரில் பெருகி வரும் கஞ்சா தொழில் என்பதே பொதுமக்களின் பரவலான கருத்தாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகர் ரமலான் முழுவதும் பரபரப்பாக இருக்கும் மாதம். அதில் மிகவும் முக்கியமாக உணவகங்கள், அதிலும் மாலை நேரத்தில் நோன்பு திறப்பதற்காக விற்கப்படும் உணவு வகைகளான போண்டா, பஜ்ஜி, பஃப் போன்ற வகைகள் அமோகமாக விற்கப்படும்.
ஆனால் இந்த உணவு வகைகள் அனைத்தும் சுகாதார முறைப்படி விற்கப்படுகிறதா என்பது பெரிய கேள்வி குறியாகும். ஏற்கனவே கலப்பட பொருட்கள் மிகுந்து கிடக்கும் இந்த உணவு சந்தையில் ஆரோக்கியிமில்லாமல் சமைக்கப்படும் உணவுகளால் பொதுமக்கள் பல் வேறான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.
நேற்று (25/05/2018) கீழக்கரை நகரில் உள்ள சர்வதேச உணவை பெயராக கொண்டு இயங்கி வரும் பேக்கரியில் வாங்கப்பட்ட கோழி ரோலில் (Chicken Roll) கழிவாக கருதப்படும் கோழியின் குடலை, அதில் உள்ள கழிவுகளை கூட நீக்காமல் வைத்து தயார் செய்துள்ளார்கள். அதை வாங்கிய வாடிக்கையாளர் ருசியில் மாற்றமும், வாடையும் வருவதை கண்டு, முழுமையாக பார்த்த பொழுது கழிவு பொருட்களும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த விசயத்தில் புனித மாதத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகள் மக்களை ஏமாற்ற எத்தனிக்கிறார்கள். இத்தருணத்தில் கீழக்கரை நகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலகம், நகரில் இயங்கும் உணவகங்களை ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்பாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.