புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பல பேர் மீது பரமக்குடியில் விதி மீறியதாக வழக்கு…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11/09/2018ல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் விதிகள் மீறி செயல்பட்டதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் இன்று (13.9.18) கூறினார். அவர் கூறுகையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைத்தன்று விதிகளை மீறி அஞ்சலி செலுத்த வந்ததாக 2017 இல் 105 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு விதிமுறைகளை கண்டறிய பரமக்குடி உள்பட 67 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் விதிகளை மீறி ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக வேந்தோணி வி ஏ ஓ தட்சிணாமூர்த்தி புகாரில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் கதிரேசன், பரமக்குடி நகர் செயலர் புருஷோத்தமன், காட்டு பரமக்குடி ஜீவா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  காட்டு பரமக்குடி வி ஏ ஒ செந்தில்குமார் புகாரில் பரமக்குடி கலாநிதி, யேசு துரை, வினோத் மணி மற்றும் சிலர் அனுமதியின்றி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விளம்பர பதாகை வைத்ததாகவும், கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக எல் ஐ சி ஊழியர் (ஓய்வு) , காட்டு பரமக்குடி நந்தகுமார் புகாரில் மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேமரா பதிவுகள் அடிப்படையில் விதிமீறல் தெரிய வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

#Paid Promotion