Home செய்திகள் CAA குடியுரிமை திருத்தச் சட்டமும்:  எதிர்க்கட்சிகளின் ரியாக்‌ஷனும்..?

CAA குடியுரிமை திருத்தச் சட்டமும்:  எதிர்க்கட்சிகளின் ரியாக்‌ஷனும்..?

by Askar

CAA குடியுரிமை திருத்தச் சட்டமும்:  எதிர்க்கட்சிகளின் ரியாக்‌ஷனும்..?

மக்களவைத் தேர்த்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என கூறப்படும் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு இன்று நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

பாஜக-வால் 2019-ல் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, பார்சி, பௌத்தம், சமணம், கிறித்தவம் மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள், குறைந்தது 5 ஆண்டுகள் தங்கியிருந்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பா.ஜ.க அரசு இதனை நடைமுறைக்கு கொண்டுவராமலிருந்து. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் எனக் கூறப்படும் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு இன்று நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

மக்களவைத் தேர்தல் மற்றும் தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் மீது மக்கள் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில், சி.ஏ.ஏ-வை பா.ஜ.க அரசு நடைமுறைப்படுத்தியதற்கும், அதிலிருக்கும் சட்ட விதிகளுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ-வுக்கான விதிகளை அறிவிக்க மோடி அரசு 4 ஆண்டுகள் மூன்று மாதங்கள் எடுத்திருக்கிறது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நேரத்தில் விதிகளை வெளியிடுவதன் நோக்கம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் பா.ஜ.க ஆதாயம் அடைவது. மேலும், தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியிருக்கும் நேரத்தில் அதிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சி இது” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், “மீண்டும் குடி நிம்மதி பறிப்புச் சட்டம். தேசத்தின் அமைதியைப் பறிக்கும் சட்டம். தேர்தல் நேரத்தில் மக்களைப் பிரிக்கத் திட்டம். ஸ்டேட் வங்கியை தோலுரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்பும் மகா மோசமான அரசியல் திட்டம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

மேலும், பா.ஜ.க அரசு இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பு இத்தகைய தூண்டுதல் தேவையற்றது. இதை ஒருபோதும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதில், மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் ஏதேனும் இருந்தால் நிச்சயம் எதிர்ப்போம்.

ஏன் இது மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்படுகிறது  எதற்காக ரமலான் தொடங்குவதற்கு முன்பு கொண்டுவரப்படுகிறது விதிகள் எப்படி வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கக் காத்திருக்கிறோம். ஒருவேளை அதில் ஏதேனும் பாகுபாடு இருந்தால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!