Home செய்திகள் திமுக தோல்வி பயத்தால் தேர்தல் ஆணையம் அதிமுகவோடு கூட்டணி என தெரிவித்து வருகிறது ” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி…

திமுக தோல்வி பயத்தால் தேர்தல் ஆணையம் அதிமுகவோடு கூட்டணி என தெரிவித்து வருகிறது ” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி…

by ஆசிரியர்

தூத்துகுடி மாவட்டம் ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 19 ம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது.இதனையொட்டி தருவைகுளத்தில் அதிமுக தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற்றது. பால் வள துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- “அம்மா பெயரில் கட்சி நடத்த டிடிவி தினகரனுக்கு அருகதை கிடையாது , 2006 ஆம் ஆண்டு ஜெயல்லிதாவால் விரட்டபட்டவர் தான் தினகரன் ,இந்த ஆட்சியை அகற்ற திமுகவோடு இணைந்து  சதி செய்து வருகிறார். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் இந்த ஆட்சியை பாதுகாக்க கேடயமாக தற்கொலை படையாக செயல்படுவார்கள், டிடிவியின் கணக்கு பொய் கணக்கு ஸ்டாலின் கணக்கு மன கணக்கு ஸ்டாலினோடு அல்லது யாருடன்  டிடிவி சேர்ந்தாலும் மக்கள் ஆதரவோடு செயல்படும் இந்த அரசை ஒன்றும் செய்ய முடியாது

39 நாடாளுமன்ற தொகுதி 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி  பெறும் , திமுகவிற்கு தோல்வி உறுதி என்று தெரிந்து விட்டதால் அதிமுகவோடு தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்து இருப்பதாக கூறி வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் அரசுக்கு செயல்படவில்லை மோடியின் திரைபடத்தை கூட தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு அது சரியான முறையில் செயல்படுவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தருவைகுளம் கடற்கரைக்கு சென்ற அவர் மீனவர்களிடம் வாக்குகளை சேகரித்தார்.பின்னர் ஒரு படகில் ஏறி சென்று அதனை இயக்கியும் சிறிது தூரம் சென்று கடலில் சென்று கொண்டிருந்த மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!