அரசு பஸ் வழித்தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கினார்…

இராமநாதபுரம் அருகே முதலூருக்கு அரண்மனை பஸ் நிறுத்தத்தில் இருந்து.அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த வழித்தட அரசு பஸ்சை போகலூர் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அமைச்சர் மணிகண்டனிடம் கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். வழித்தடத்தை நீட்டிப்பு செய்ய சிறப்பு கவனம் செலுத்துமாறு இராமநாதபுரம் போக்குவரத்து கழக நகர் பேருந்து மேலாளரிடம் அமைச்சர் மணிகண்டன் அறிவுறுத்தினார்.

அதை தொடர்ந்து  வழித்தடத்தில் நீட்டித்த டவுன் பஸ் சேவையை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ், சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அமைச்சருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.