நரிப்பையூர் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு..

இராமநாதபுரம் கடலாடி வட்டம் நரிப்பையூர் அருதே எஸ்.தரைக்குடி தனியார் நிலத்தில் உள்ள பனங்காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல் குறித்து கடலாடி வருவாய் ஆய்வ பிரசாத், சாயல்குடி போலீசில் புகார் கொடுத்தார்.

இதனடிப்படையில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அங்கு பாதி எரிந்த நிலையில் சடலத்தை கைப்பற்றினர். மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு இச்சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அடையாளம் தெரியாத ஆண் சடலம் என உறுதி செய்த போலீசார் கொலையா? தற்கொலையா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..