மதுரையில் இந்திய கட்டுமான சங்கம் சார்பில், கட்டுமானர்கள் தின விழா..

மதுரையில் இந்திய கட்டுமான சங்கம் சார்பில், கட்டுமானர்கள் தின விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் சிவகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். உடன் சேர்மன் மீனாட்சிசுந்தரம், நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன், மதுரை சேர்மன் ரமேஷ், செயலாளர் ரெங்கராஜ், துணை சேர்மன் பாலன், முன்னாள் சேர்மன் ராமச்சந்திரன், தியாகராஜா பொறியியல் கல்லூரி பேராசிரியர் வேல்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.