Home செய்திகள் மறைந்தும் மனதில் வாழும் வள்ளல்.. ஒரு முன்னாள் மாணவனின் கால பதிவோட்டம்…

மறைந்தும் மனதில் வாழும் வள்ளல்.. ஒரு முன்னாள் மாணவனின் கால பதிவோட்டம்…

by ஆசிரியர்
கடந்த 1986-89ம்ஆண்டு காலகட்டங்களில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் ஆக்கூரில் இருக்கும் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயிர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். இந்த பள்ளியில் இருந்து வந்த பின் சில நண்பர்களின் தொடர்பு மற்றுமே இருந்தது. இவர்களில் முக்கியமானவர் காயல்பட்டினத்தை பூர்விகமாக கொண்டு கீழக்கரையில் திருமண செய்த சகோதரர் முத்து அகமது அவர்கள். இவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சந்தித்தேன். என்னிடம் பேசிய அவர் ஆக்கூரில் நாம் படித்த காலகட்டங்களில் படித்த மாணவர்களில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த சகோதரர் செய்யது சுல்தான் அவர்கள் பழைய மாணவர்கள் சிலரை ஒன்றினைந்து கடந்த ஐந்து வருடங்களாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா(GET TO GETHER) நடத்துவதாக தெரிவித்தார்.
இதில் கலந்து கொள்ள நாங்களும் முடிவு செய்த நிலையில் 20ம்தேதி புதன்கிழமை காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இந்த நிகழ்வுக்கு ஆக்கூர் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நானும்,ஏராளமான முன்னாள் மாணவர்களும், இன்றைய மாணவர்களும், முன்னாள் ஆசிரியர்கள்,தற்போது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில்  நானும்,முத்து அகமது மட்டுமே கீழக்கரையில் இருந்து சென்று இருந்தோம். கீழக்கரையில் இருந்து சென்று இருப்பதை அறிந்த எங்கள் முன்னாள் தமிழ் ஆசிரியர் முனைவர் சிவசங்கரன் அவர்கள் கூறிய ஒரு தகவல் எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. கடந்த பல வருடங்களுக்கு முன் உங்கள் ஊரை சேர்ந்த சீதக்காதி அறக்கட்டளை நிறுவனர் மறைந்த மரியாதைக்குரிய B.S.அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த பள்ளியையும்,விடுதியையும் பார்வையிட வந்தார்கள். அன்றைய காலகட்டங்களில் ஏராளமான ஏழை மாணவர்கள் உள்பட அதிகமான மாணவர்கள் படித்து வந்தனர். அன்றைய சூழ்நிலையில் விடுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உணவு அளிப்பதில் பொருளாதார தொய்வு நிலை நிலவி ஏற்பட்டது. இந்த நிலையை பள்ளியையும், விடுதியையும் பார்வையிட வந்த அவர்களிடம் அன்றைய நிர்வாகிகள் எடுத்து கூறினார்கள். இதை கேட்ட B.S.அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த பள்ளிக்கு என்ன வசதி வேண்டும் என வினவினார்கள். இதை கேட்ட அன்றைய நிர்வாகிகள் நெல் சாகுபடி செய்ய விவசாய நிலம் வேண்டும் என்றும், அதில் நெல் சாகுபடி செய்து ஏழை மாணவர்களுக்கு உணவு வழங்க நிர்வாகம் முயற்சி செய்யும் என்று கூறினார்கள். இதை கேட்ட B.S.அப்துல் ரஹ்மான் அவர்கள் அப்படி ஒரு இடத்தை கூறும் படி கேட்டதோடு இதற்கான முயற்சியில் உடனடியாக இறங்கி ஆக்கூர் அருகில் இருக்கும் பூகுயில் என்ற கிராமத்தில் பத்து ஏக்கர் விவசாய நிலத்தை விடுதியின் நிர்வாக கமிட்டி பெயரில் பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்கள். இன்று வரை அந்த விவசாய நிலத்தில் விலையும் அரிசி இந்த விடுதி மாணவர்களுக்கு கொண்டு வரப்படுகின்றது என்றார். இந்த தகவலை தமிழாசிரியர் அவர்கள் விழா மேடையிலும் அறிவிக்கும் போது கீழக்கரையை சேர்ந்த எங்களுக்கு பெருமையாக இருந்தது.
மறைந்த வள்ளல் அப்துல் ரஹ்மான் அவர்களின் இந்த ஈகை குணம் நிறைந்த நிரந்தர தர்ம செயலால்,  இன்று வரை அவர்களின் பெயர் நினைவு கூறப்படுகிறது. இது போல் அவர்களின் வாரிசுகள் மற்றும் இவர்களின் உறவினர்கள் அரபி மூலத்தை முக்கிய பாடமாக கொண்ட இந்த பள்ளிக்கும், விடுதிக்கும் தர்ம காரியங்கள் செய்ய முன் வர வேண்டும். குறிப்பாக மாணவர்கள் படிக்க வள்ளல் அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரில் கட்டிடம் கட்டிக்கொடுக்க முன் வர வேண்டும்.
பாசத்தோடு – M.U.V.முகைதீன் இப்ராகீம்,

EID MUBARAK

You may also like

2 comments

Mohamed Sabir Khan June 23, 2018 - 3:15 pm

MASHA ALLAH

M U V mohideen ibrahim June 24, 2018 - 7:00 am

ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளி அரபி பாடத்தை முக்கிய பாடமாக கொண்டு தமிழக அரசின் சமச்சீர் பாடத்தை அடிப்படையாக கொண்டது.நான் படிக்கும் காலகட்டத்தில் தமிழகத்தில் இப்படிப்பட்ட ஏழு கல்வி நிலையங்கள் செயல்பட்டது.குறிப்பாக நிஜாம் ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளி,புதுக்கோட்டை,ஆம்பூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி,ஆம்பூர் அல்-அமீன் ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி (ஆங்கில வழி),கும்பகோணம் தனியாக பெண்களுக்கான உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளி,பள்ளப்பட்டி (இந்த பள்ளியில் என் மகளார் படித்தார்) இப்படி அரபியை பிரதானமாக நடத்தக்கூடிய பள்ளிகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு பிரியட் பாடமாக திருக்குர்ஆனில் ஒரு சூராவை பாடமாக எடுத்து அதன் தப்ஸீர் முறை போதிப்பது,மற்றொரு பிரியட் அரபி இலக்கண முறையில் பாடம் நடத்துவது சிறப்பு அம்சம் ஆகும்.அத்துடன் ஹாஸ்டலில் இஸ்லாமிய ஒழுக்கங்களை போதிப்பது குர்ஆன் கற்றுக்கொடுப்பது கண்டிப்பாக அனைத்து வஃது தொழுகைகளை தொழுக செய்வது தொழுக வைக்க மாணவர்களை தயார் படுத்துதல் என இஸ்லாமிய மாண்புகளுடன் கூடிய ஹாஸ்டல் வசதியுடன் கூடிய பள்ளி கூடங்கள் ஆகும்.இப்படிப்பட்ட பள்ளிகளில் படித்த எத்தனையோ மாணவ,மாணவிகள் உயர் பதவிகளில் இருப்பதுடன்,வளைகுடா நாடுகளின் நல்ல வேலையில் இருக்கின்றார்கள்.இப்படிப்பட்ட பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிக்க குறைந்த உணவு கட்டணங்கள் பெறுவது அருமையான நடைமுறை ஆகும்.இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுதலாக இருக்கும்.இப்படிப்பட்ட பள்ளிகள் சிறப்பாக செயல்படவும் மேலும் உருவாகவும் நாம் பாடுபட வேண்டும்.இப்படிப்பட்ட பள்ளிகளில் நமது குழந்தைகளை சேர்த்து ஒழுக்கத்தோடு சிறந்த கல்வியை கற்க செய்ய வேண்டும்.தற்போது ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழி பாடதிட்டங்களை செயல்படுத்த இருப்பது மகிழ்ச்சியான தகவல் ஆகும்.இதற்காக வகுப்புகள் அமைய கட்டுமான பணிகள் இப்பள்ளி வளாகத்தில் விரைவில் தொடங்க இருக்கின்றது.

நமது கீழக்கரையை சேர்ந்த கல்வி தந்தை மர்ஹூம் B.S.அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரில் கல்விக்கான அவர்களின் நினைவு கட்டிடங்கள் அமைந்தால் சால சிறந்ததாக இருக்கும்.அவர்களின் புதல்வர்களும்,உறவினர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாசத்தோடு,
M.U.V.முகைதீன் இப்ராகீம்

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com