Home செய்திகள்உலக செய்திகள் உலகின் முதல் இணைய உலாவி (Internet Browser) அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 26, 1990)

உலகின் முதல் இணைய உலாவி (Internet Browser) அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 26, 1990)

by mohan
ஒரு இணைய உலாவியின் நோக்கம் தகவல் வளங்களைப் பெறுவதோடு, பயனரின் சாதனத்தில் அவற்றை காட்சிப்படுத்துவதாகும்.வலைப்பக்கம் மீண்டும் பெறப்பட்டவுடன், உலாவியின் மொழிபெயர்ப்பு இயந்திரம் பயனரின் சாதனத்தில் காண்பிக்கிறது. இதில் உலாவியால் ஆதரிக்கப்படும் படம் மற்றும் வீடியோ வடிவங்கள் அடங்கும்.இணையம் (வலைப்பின்னல்) என்பது பல்வேறு உலகின் பல்வேறு கணினிகள் ஒன்றுக்கொன்று வலைப்பின்னல் வழியாக பின்னப்பட்டிருப்பதை தான் நாம் இணையம் என்கிறோம். ஒன்றிலிருக்கும் தகவல்கள் மற்றொரு கணினியின் வழியாக பெற்றிட முடியும். அதற்கு உதவுவது தான் இவ்வலைப்பின்னல்.
வலைப்பின்னலில் இணைந்திருக்கும் கணினிகளை இருவகையாக பிரிக்கலாம்.
1. கிளையண்ட் (வாடிக்கையாளர்)
2. சர்வர் (வழங்குனர்)
எந்த கணினியில் தகவல்களை தேடுகிறோமே அதைகிளையண்ட் (Client) கணினி என்றும், அதற்கு வலைப்பின்னல் வழியாக தகவல்களை அனுப்பும் கணினி சர்வர் (Server) என்றும் வழங்கப்படுகிறது.
நாமெல்லாம் வாடிக்கையாளர்கள். நமக்கு தகவல் கொடுக்கும் கணினி சர்வர். அவ்வளவுதான்.நம் கணினியில் பிரௌசர் மூலம் நாம் அனுப்பும் தகவல்கள் DATA POCKET களாக பிரிக்கப்பட்டு, அது இருக்கும் சரியான சர்வருக்கு சென்றடைகிறது. அங்கிருந்து, நாம் அனுப்பிய பாதையின் வழியாகவே நமக்கு  திரும்ப கிடைக்கிறது.
வொர்ல்ட்விடெவெப் எனும் முதல் உலாவி 1990 ஆம் ஆண்டில் சர் டிம் பெர்னர்ஸ்-லீ என்பவரால் கண்டறியப்பட்டது.1995 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை அறிமுகப்படுத்தியது, இது நெட்ஸ்கேப் உடன் ஒரு உலாவி போருக்கு வழிவகுத்தது.1998 ஆம் ஆண்டில், போட்டித்திறன் மிக்க நிலையில், நெட்ஸ்கேப் திறந்த மூல மென்பொருள் மாதிரியைப் பயன்படுத்தி ஒரு புதிய உலாவியை உருவாக்க மொஸில்லா அறக்கட்டளை ஆனது தொடங்கப்பட்டது.ஆப்பிள் அதன் சஃபாரி உலாவியை 2003 இல் வெளியிட்டது. இது ஆப்பிள் தளங்களில் மேலாதிக்கம் செலுத்தும் உலாவியாகும், இருப்பினும் அது வேறு ஒரு காரணியாக மாறவில்லை.
இப்பொது கூகிள் குரோம் (Google Chrome),
மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox),
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer), சபாரி (Safari),
மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge),
ஓபரா(Opera),
யூசி உலாவி (UC Browser),
யாண்டெக்ஸ் உலாவி (Yandex Browser ), குரோமியம் (Chromium),
சோகோ எக்ஸ்ப்ளோரர் (Sogou Explorer),
QQ உலாவி (QQ browser) போன்ற உலாவிகளை பயன்படுத்துகிறார்கள்.
அனைத்து முக்கிய உலாவிகளும் பயனரால் ஒரே நேரத்தில் பல பக்கங்களை திறக்கின்றன, வெவ்வேறு உலாவி சாளரங்களில் அல்லது அதே சாளரத்தின் வெவ்வேறு தாவல்களில்.பல்வேறு வழிகளில் உலாவி இயக்கத்தைச் சேர்க்க அல்லது மாற்றுவதற்கான நீட்டிப்புகளைப் பயன்படுத்துவதை அவை ஆதரிக்கின்றன.
உலாவி முந்தைய (Back) பக்கங்களுக்கு சென்று பார்வையிடவோ ,
நடப்பு பக்கத்தை மீண்டும் புதுப்பிக்கவோ(Refresh), பயனரின் வீட்டுப் பக்கத்திற்குத்(Home Page) திரும்புவதற்கும் மற்றும் ஒரு பக்கத்தின் URL ஐ உள்ளிடுவதற்கும் பயன்படுகிறது. உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள்.கைபேசி, மடிக்கணினி, கணிணி என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்த இந்த இணைய உலாவி அறிமுகப்படுத்தப் பட்டது.இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார்.இந்த இணைய உலவி அவரது பெயரிலேயே நெக்சஸ் (Nexus) என அழைக்கப்பட்டது.இவர் தான் உலகம் பரவிய வலையை (WWW) இணையத்தையும் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!