ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்..

வேடசந்தூர் அருகே ராஜகோபாலபுத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பள்ளியில் ஜாக்டோ -ஜியோ போரட்டத்தில் ஈடுபட்டு பனியிடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் தியாகராஜன் என்பவரை மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்தக்கோரி பள்ளிமாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர். அதனால் 187 மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளியில் 6பேர் மட்டும் வந்தனர்.