48
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் கண்மாய் கரை சாலை பழுதடைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் தற்போது 49 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மெட்டல் சாலை அமைக்கும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் பசும்பொன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர் உமாதேவி ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய பெருந்தலைவர் வேட்டையன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் இளைஞரணி அமைப்பாளரும், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கருவேலம்பட்டி வெற்றி,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி,மாவட்ட கவுன்சிலர் ராஜசேகரன்,கிளைச் செயலாளர்கள் ராஜா கண்ணன், சோணைமுத்து, அய்யனார், முருகன், அக்னி சரவணன், நிலையூர் நித்தியானந்தம், குருமூர்த்தி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.