செங்கோட்டை அரசு நூலகத்தில் பத்தாவது ஆண்டாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உதவியுடன் புத்தக கண்காட்சி நவ.16 இன்று தொடங்கியது. இன்று முதல் பத்து நாள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மயிலேறும் பெருமாள் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் ஆதிமூலம் செண்பக குற்றாலம் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா. சுதாகர் வரவேற்றார். முதல் விற்பனையை ரோட்டரி கிளப் துணை ஆளுநர் சித்தன் ரமேஷ் தொடங்கி வைத்தார். ஓய்வு கல்வி அதிகாரி சுடலை, ரோட்டரி கிளப் நிர்வாகிகள் அபு அண்ணாவி, முருகன், முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். முடிவில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நூலகர் ராமசாமி செய்திருந்தார். நூலகத்தில் 10% தள்ளுபடியுடன் புத்தக விற்பனை தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக செங்கோட்டை நூலகத்தில் 56-வது நூலக வார விழா தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக “வாசிப்பு வளரட்டும்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட இணைச் செயலாளர் செண்பக குற்றாலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். செயலாளர் சீதாராமன் நிர்வாகிகள் அபு அண்ணாவி, ராஜ குலசேகர பாண்டியன், சபீக் அகமது, காதர் மைதீன், SMSS பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியைகள் மாலினி, தீபா ஆகியோர் நடுவராக செயல்பட்டார்கள். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி கூறினார். இவ்விழாவில் 11 பள்ளிகளிலிருந்து 45 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.