Home செய்திகள் மோடியின் வாயை அடைக்க தேர்தல் கமிஷனுக்கு ரத்தத்தை மையாக்கி கடிதம்..!

மோடியின் வாயை அடைக்க தேர்தல் கமிஷனுக்கு ரத்தத்தை மையாக்கி கடிதம்..!

by ஆசிரியர்

‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவதூறாக பேசுவதை தடுக்க வேண்டும்’ என, அமேதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேர்தல் கமிஷனுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஊழலில் ‘நம்பர் ஒன்’ ஆக இருந்தவர் ராஜீவ்காந்தி’ எனக் கூறினார். மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸார் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், ‘மோடி பேசியதில் எந்த விதி மீறலும் இல்லை’ என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த மனோஜ் கஷ்யப் என்ற இளைஞர், மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் ரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது; “முன்னாள் பிரதமர், ராஜீவ்காந்தி ஏழைகளின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார். பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை நாட்டில் அமல்படுத்தினார். நம் நாட்டில், கம்ப்யூட்டர் புரட்சிக்கு வழி வகுத்தார். ஓட்டளிக்கும் வயதை 18 ஆகக் குறைத்து, இளைய தலைமுறையினரும் ஓட்டளிக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட, ராஜீவ்காந்தியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட ராஜீவைப் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இவ்வாறு பேசாமல் இருக்கும்படி, மோடிக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!