கீழக்கரையில் வரும் 20/12/2017 அன்று முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த முகாமுடன் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் அடைந்தாலும் இரத்த தானம் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டமே படித்தவர் முதல் பாமரர் வரையில் உள்ளது. இரத்த தானம் செய்வதால் உடல் நிலை பலவீனமாகி விடும் அல்லது தொற்று நோய்கள் வந்து விடும் என்பது போல பல வகையான அறியாமை கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் அதற்கு மாறாக இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய இரத்தம் உருவாகும் , உடலில் உள்ள சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும் போன்ற பல பலன்களும் உள்ளன. இது போன்ற சந்கேங்களுக்கு விடையளிக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்களில் இத்துறைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் உரையாற்ற உள்ளார்கள்.
65
previous post
You must be logged in to post a comment.