செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளையொட்டி இரத்த தான முகாம்..

செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் E. M. அப்துல்லா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யூத் ரெட் கிராஸ் (YRC) நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் தேவிபட்டினம் ஆரம்ப சுகாதாநிலையம் ஆகியோர் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் 05/07/2018 அன்று செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் தொடக்கமாக  யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் கே.. ராஜமகேந்திரன் வரவேற்றார்.  பின்னர் செய்யதம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளார் ராஜாத்தி அப்துல்லா தலைமையில் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா  மற்றும் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன்  ஆகியோரின் முன்னிலையில் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எம். சாலிகு ரத்த தான முகாமினை துவக்கி வைத்தார். 

அதைத் தொடர்ந்து தேவிபட்டினம் ஆரம்ப சுகாதா நிலைய வட்டார மருத்துவர் டாக்டர் பி. மகேஸ்வரி மற்றும் அவரது குழுவினர்  மாணவர்கள் 40 பேரிடம் ரத்தம் சேகரித்தனர்.

மேலும் முதல்வர் முனைவர் எஸ்.வி. எஸ். அமானுல்லா ஹமீது,  ரெட் கிராஸ் செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம்,  ரெட் கிராஸ் புரவலர் எம். தேவி உலகராஜ் ஆகியோர் ரத்த தானம் செய்த மாணவர்களை பாராட்டிப் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக   மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் எ. வள்ளி விநாயகம் நன்றியுரையாற்றினார்.

ரெட் கிராஸ் ரத்த தான முகாம் அமைப்பாளர் எஸ். அய்யப்பன் நிர்வாக அலுவலர்கள்  ஷாகுல் ஹமீது மற்றும் சபியுல்லாஹ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.

#Paid Promotion