மதுரையில் பாரதிய ஜனதா கட்சி பேரணி..

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் மைதானத்தில், பாரதிய ஜனதா கட்சி மகளிரணி சார்பில் அதன் மாநிலத் தலைவி மகாலட்சுமி தலைமையில், வாகன பேரணி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். உடன் மதுரை மாவட்ட தலைவர் சசிராமன், ஹரிகிருஷ்ணன், சிவபிரபாகரன், பொக்கிஷம் வெங்கடேசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், மத்திய தொகுதி மீடியா பொறுப்பாளர் கிருஷ்ணன், அறிவுசார் பிரிவு மாவட்ட தலைவர் காந்தி குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.