Home செய்திகள் பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி-தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..

பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி-தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..

by Askar

தமிழகத்தில் மக்களை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.அதிமுக, பா.ஜனதா கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்று வரை அதிமுக கூட்டணியில்தான் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.இந்த நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என பாமக திடீரென அறிவித்தது. அதன்படி நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்றனர். அண்ணாமலையை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.பின்னர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் சில சந்தேகங்களை அண்ணாலையிடம் எழுப்பினார். இது தொடர்பாக தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவிக்க அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் உடன் தனிஅறையில் ஆலோசனை நடத்தினர்.பின்னர் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com