Home செய்திகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை சார்பில் பாரதியார் சிலை திறப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை சார்பில் பாரதியார் சிலை திறப்பு

by mohan

மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை சார்பாக பாரதியாரின் திருவுருவச் சிலை இன்று திறக்கப்பட்டது.மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் துறை கட்டிடம் முன்பு பாரதியாரின் 11 அடி திருவுருவச் சிலை இன்று பல்கலைக்கழக தமிழ் துறை சார்பாக திறக்கப்பட்டது.இதில் சிலை அமைப்பதற்கு முழு உதவியும் செய்த முன்னாள் தலைமைச் செயலாளர் மேற்கு வங்காளம் கோ.பாலச்சந்திரன் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது பல்கலைக்கழகங்களில் பாரதியார்க்கு என இருக்கையில் இல்லை என ஆளுநர் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக உலக செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று அதில் சமஸ்கிருதம் கூட இல்லை இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைகள் அமர்த்தப்பட வேண்டும் அப்படி செய்தால் பாரதியாருக்கு இருக்கையில் அமைப்பதை பற்றி பேசலாம் என தெரிவித்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் சத்தியமூர்த்தி தமிழ் துறை தலைவர், பேராசிரியர் குமார் துணை வேந்தர், மாசேந்திரநாதன் மேனாள் செயலர் இந்திய அரசு, கோ. பாலச்சந்திரன் மேனால் கூடுதல் தலைமைச் செயலாளர் (மேற்கு வங்காளம்) மற்றும் தமிழ் துறை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com