Home செய்திகள் இராமநாதபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள்: பாமக ரத்த தானம்..

இராமநாதபுரத்தில் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள்: பாமக ரத்த தானம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.8- முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும்  பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ்  பிறந்த நாளையொட்டி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட செயலர் தேனி.சை.அக்கிம் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். கிரசன்ட் ரத்த வங்கி, ஆராய்ச்சி நிலைய உரிமையாளர் பயாஸ் அஹமது வரவேற்றார்.  மாவட்ட செயலர் அக்கீம் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். பசுமை தாயக மாநில துணைச்செயலர் கர்ண மஹாராஜா,  ராமநாதபுரம் நகர் செயலர் பாலமுருகன், ஒன்றிய செயலர்கள் வெங்கடேசன் ( மண்டபம்), ஷரீப் (ராமநாதபுரம்), மக்தும் கான் (திருப்புல்லாணி),  இருளாண்டி (கடலாடி), மாவட்ட தொழிற்சங்க செயலர் லட்சுமணன், இளைஞர் சங்க செயலர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், , மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் இப்ராஹிம், மாணவர் சங்கச் செயலர் சந்தோசம், உழவர் பேரியக்கத்தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com