தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 நபர்கள் கைது…

மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை விரைவில் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நேற்று (10.03.2019) மதுரை மாநகர் அண்ணாநகர் மற்றும் K.புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை செய்ததில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த (1). சண்முகம் 38/19, த/பெ.சுப்பிரமணியன், கோடாங்கி தோப்பு தெரு, திருப்பரங்குன்றம், மதுரை. (2). சுப்பிரமணியன் 66/19, த/பெ. ராமசாமி பிள்ளை, மீனாட்சி நகர் குறுக்குத்தெரு, வில்லாபுரம், மதுரை (3). அப்பாஸ் 45/19, த/பெ. யாசின், 44, R.V.நகர் 3 வது தெரு, K.புதூர், மதுரை (4). ரமேஷ்குமார் 33/19, த/பெ. பொண்ணுச்சாமி,75, ராமவர்மா நகர் 4 வது தெரு, K.புதூர், மதுரை. (5). கம்பன் 43/19, த/பெ. முருகன், செய்தியாளர்கள் நகர், மாட்டுத்தாவணி மதுரை ஆகிய ஜந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 570 புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்