வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாகக் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பல விடுமுறையின் காரணமாக வங்கிகள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
மார்ச் 27ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் வெறும் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும். மற்ற நாட்கள் அனைத்தும் விடுமுறை. இதனால் வங்கி தொடர்பாக ஏதேனும் பணிகள் இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை முடித்துக்கொள்ளுங்கள்.
இதனால் மார்ச் 27க்குப் பின் நாடு முழுவதும் வங்கிகள் இயங்கும் நாள் ஏப்ரல் 3. ஆனால் தமிழ்நாட்டில் இந்த விடுமுறைகள் இல்லை.
மார்ச் மாதம் வார இறுதி நாட்களைத் தவிர அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கும், ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ஆம் ஆகிய இரு நாட்கள் மட்டுமே வங்கிகள் விடுமுறை. இதேபோல் ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் நாள் தெலுங்கு மற்றும் தமிழ் வருட பிறப்புக் காரணமாக வங்கிகள் மூடப்படுகிறது.
You must be logged in to post a comment.