வாக்களிப்பதன் அவசியம் பல்கலை மாணவர்கள் பிரசாரம்..

வாக்களிப்பதின் அவசியம் குறித்து எஸ் ஆர் எம் பல்கலை., மாணவர்கள், ராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.

இராமநாதபுரம் அரண்மனை முன் ஓட்டுக்கு பணம் வாங்காமல் தனது 100 சதவீத வாக்கை அளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு கோஷமிட்டனர். நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்கள், பொதுமக்களிடம் வழங்கினர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்