கீழக்கரையில் விழிப்புணர்வு பேரணி..

கீழக்கரை தாலூகா மற்றும் செய்யது ஹமீதா கலைக் கல்லூரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று (17/10/2018) நடைபெற்றது.

இப்பேரணி கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை சென்றது, இதில் செய்யது ஹமீதா கலை கல்லூரி மாணவ மாணவியர், பேராசிரியர்கள், கீழக்கரை தாலூகா வருவாய் ஆய்வாளர்,  கீழக்கரை, காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியை கீழக்கரை வட்டாட்சியர் திருமதி இராஜேஸ்வரி  தொடங்கி வைத்தார். இறுதியாக இப்பேரணி கடற்கரை வரை சென்று முடிவுற்றது.

தகவல்: மக்கள் டீம்.