பன்றி காய்ச்சல், தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பில் பன்றி காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று (12.11.18) நடைபெற்றது. பரமக்குடி ராஜா மஹாலில் நடந்த இக்கூட்டத்திற்கு பரமக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குர் டாக்டர் மீனாட்சி தலைமை வகித்தார். பரமக்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வரதராஜன் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் சன்முகவேல் வரவேற்றார்.

பரமக்குடி சுகாதாரப்பணிகள் துறை, பரமக்குடி நகராட்சி இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் பன்றி காய்ச்சல். இன்புளுயென்சா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் விதம், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்களை ஒழிப்பது குறித்ரு பரமக்குடி சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி பேசினார். பன்றிக்காய்ச்சல் ,டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் விதம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புரஜக்டர் மூலம் ஒலி , ஒளி காட்சி மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர்கள் சரவணன், முகமது சுல்தான், தேவி, நலப்பணிகள் பயிற்சி மருத்துவர் கலைச்செல்வி, மருத்துவ பணியாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.