Home செய்திகள் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் விபத்து மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி..

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் விபத்து மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி..

by ஆசிரியர்

கடையநல்லூர் “கேஎப்ஏ1986 கடையநல்லூர் நண்பர்கள் கூட்டமைப்பு” சார்பில் விபத்து மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 10/10/2018 இன்று மாலை 4மணியளவில் பேட்டை காதர்மைதீன் குத்பா பள்ளிவாசல் முன்பு நடைபெற்றது.

இப்பேரணிக்கு கேஎப்ஏ1986 அமைப்பின் தலைவர் அப்துல் காதர் தலைமை தலைமை வகித்தார். துணை தலைவர் அசன் இபுராஹீம் வரவேற்றார். கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ஜனார்தனன் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இப்பேரணி நகரின் முக்கிய வீதியான சந்தை தெரு, மெயின் ரோடு, பெரியதெரு, அல்லிமூப்பன் தெரு , பஜார்தெரு , வழியாக சென்று இறுதியில் காயிதே மில்லத் திடலில் முடிடவடைந்தது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கடையநல்லூர் சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் புகாரி ஆகியோர்  மதுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள், சமுதாயத்தில் அதன் தாக்கம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

ஆசிரியர் ஹுசைன் தொகுத்து வழங்கினார். இதில் தாருஸ்ஸலாம், ஹிதாயத்துல் இஸ்லாம், உலகா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மசூது தைக்கா மேல்நிலைபள்ளி, பெஸ்ட் ஸ்கூல் மாணவர்கள் மற்றும் கேஎப்ஏ1986 அமைப்பின் நிர்வாகிள் கலந்துகொண்டனர். இறுதியில் செயலாளர் முஹம்மது நன்றி கூறினார்.

தகவல்:- அபுபக்கர் சித்திக்

செய்தி:1அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com