பாலியல் சீண்டலிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ளுதல் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.பஞ்சவர்ணம் ஆலங்குளம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடத்தில் POCSO Act மற்றும் காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ள காவலன் செயலி பற்றியும் அதனை பயன்படுத்தும் விதங்களை பற்றியும்¸ பாலியல் உணர்வுடன் ஒருவர் நெருங்குவது¸ தொடுவது போன்றவை குறித்த விழிப்புணர்வினை மாணவிகளுக்கு வழங்கினார்.