வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்களிப்பது எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்கிற கோசத்தை முன்வைத்தும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பழனி நகர்க்குழுவின் சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி 24.03.19 அன்று பழனியில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரத்தை பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு.விவேகானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், பழனி நகர்க்குழு சார்பில் S.மாலதி நகர தலைவர், P.தங்கவேல் நகரசெயலாளர், பழனி பொருளாளர் வெள்ளியங்கிரி, பழனி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பகத்சிங், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.