உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய உட்புறத்தில் பொதுமக்கள் வாக்களிக்கும் முறைää வாக்கு இயந்திரங்களை கையாளுவது மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு முகாமில் வாக்குப்பதிவு யாருக்கு செய்தோம் என்பதும் யாருக்கு வாக்களித்தோம் என்பதும் உடனடியாக வாக்காளருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தாசில்தார்கள் செந்தாமரை, ஆனந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அரசு அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.