Home செய்திகள் ராமநாதபுரத்தில்  தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு பாராட்டு சான்று..

ராமநாதபுரத்தில்  தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு: சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு பாராட்டு சான்று..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.29- 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு  ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கல்வி ஒருங்கிணைப்பாளர் சதக் அப்துல்லா வரவேற்றார். அறிவியல் கண்காட்சியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்ய ராஜ் துவங்கி வைத்தார். அழகப்பா பல்கலை. அரசுக் கல்லூரி இணைப் பேராசிரியர் கருணாகரன்,  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் முத்துலட்சுமி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் மகேந்திரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் காந்தி ஆகியோர் பேசினர். காணொலி மூலம் நாசா விண்வெளி அறிவியல் அறிஞர் சிவபெருமான்,  தென் கொரியா கொஞ்சி தேசிய பல்கலை அறிவியல் அறிஞர்கள் கார்த்திகை ராஜன், மோகன் தாஸ் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சமர்ப்பித்த .87 ஆய்வுக் கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.  மண்டல அளவிலான போட்டிக்கு தமிழ் வழி ஜூனியர் பிரிவில் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  தேவிபட்டினம்  கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, ஆங்கில வழி ஜூனியர் பிரிவில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளி, தேவிபட்டினம்  கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, ஆங்கில வழி சீனியர் பிரிவில் நேஷனல் அகாடமி, ராமநாதபுரம்  நபிஷா அம்மாள் மெட்ரிக் பள்ளி,  வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டன. கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் சசிகுமார், லியோன், ஜெரோம் சிற்பியன், கணேசன், வின்சென்ட் ஆகியோர் மாநாடு ஏற்பாடுகளை செய்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com