Home செய்திகள் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம்.! -அமைச்சர் மூர்த்தி பேட்டி‌.

அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம்.! -அமைச்சர் மூர்த்தி பேட்டி‌.

by syed abdulla

அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம்.! -அமைச்சர் மூர்த்தி பேட்டி‌.

தமிழர்களின் வீர விளையாட்டு போட்டி பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதல் போட்டியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரையில் மேயர் இந்திரா ராணி, மாநகராட்சி மதுபாலன் ஆணையாளர், காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில்;

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து நிரந்தர வாடிவாசல் வைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கலந்து ஆலோசித்து நிரந்தர வாடிவாசல் வைப்பதற்கான முடிவெடுப்பார்கள்.

உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூர் மாடுகளை கொண்டு வந்து உள்ளூர் மாடுகள் என கூறுவதால் வரும் பிரச்சனை இது..

அலங்காநல்லூர் , பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்..

சிறந்த மாடுகள் மாடுபிடி வீரர்கள் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதா.? என கேட்டதற்கு முன்பு எப்படி இருந்ததோ அது போல் தான் இருக்கும் என்றார்.

மாடு பிடி வீரர்கள், காளைகள் போலியாக ஜெராக்ஸ் எடுத்து களம் இறக்கும் பிரச்சனை இந்த முறை நடக்காது, மாவட்ட ஆட்சியர் நேரடியாக முன்னின்று நடத்துவார். எந்த ஒரு தவறும் நடக்காது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்..

செய்தியாளர் ,வி ,காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!