Home செய்திகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காயங்கள் அல்லது உயிரிழப்புகளை தடுக்க அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காயங்கள் அல்லது உயிரிழப்புகளை தடுக்க அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

by Askar

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காயங்கள் அல்லது உயிரிழப்புகளை தடுக்க அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

தமிழர்களின் வீர விளையாட்டு என ஜல்லிக்கட்டு போட்டி தை ஒன்றாம் தேதி ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்திலும் அதனைத் தொடர்ந்து பாலமேடு அலங்காநல்லூர் என அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.கடந்தாண்டை போல் இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்., அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த எட்டாம் தேதி அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் முகூர்த்தக்கால் உண்ட பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் நடைபெற்றது.

தொடர்ந்து., அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு 26.5 லட்சம் செலவில் கம்பு கட்டும் பணி, வாடிவாசல் அமைக்கும் பணி, காளைகள் அழைத்து வரும் இடம் மற்றும் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் நான்கு நாட்களை உள்ள நிலையில்., கடந்த ஆண்டு விட இரண்டு மடங்கு பணிகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அளவில் இந்தாண்டு 120 டன் அளவில் சவுக்கு மரக்கட்டைகள், 150 பண்டல் சணல் கயிறுகள் மூன்று நாட்களாக 80க்கும் மேற்பட்ட பணியாட்களை கொண்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எந்த ஆண்டு விட இந்த ஆண்டு புதிதாக காளைகளை அழைத்து வரும் பகுதியில் காயங்கள் ஏற்படாத வகையில் கொஞ்சம் கொஞ்சமாக காளைகளை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காயங்கள் அல்லது உயிரிழப்புகளை தடுப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு வழிவகை செய்திருப்பதாக ஜல்லிக்கட்டு பணி குழு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து., அரசு பாதுகாப்பு வழங்க காவல்துறையுடன் எவ்வளவு பணிகளை மேற்கொண்டாலும் மாட்டின் உரிமையாளர்கள் உதவியில்லாமல் எதுவும் செய்யமுடியாது. அந்த அந்த மாட்டின் உரிமையாளர்க் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனுடன் முறைப்படி வரிசையில் வந்து போட்டியில் பங்கேற்க வேண்டுமென கட்டைகள் அமைக்கும் பணியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!