Home செய்திகள் பழனியில் குற்றவாளிகள் தாக்கியதில் படு காயமடைந்த எஸ்.ஐ ஆறுமுக நயினார், முன்னர் ஏர்வாடியில் பணிபுரிந்தவர்..காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து ஆறுதல்….

பழனியில் குற்றவாளிகள் தாக்கியதில் படு காயமடைந்த எஸ்.ஐ ஆறுமுக நயினார், முன்னர் ஏர்வாடியில் பணிபுரிந்தவர்..காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து ஆறுதல்….

by ஆசிரியர்
பழனியில் குற்றவாளிகள் தாக்கியதில் முகத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் எஸ்ஐ. ஆறுமுக நாயினாரை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்தோரையும் விரைந்து பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை மதுக்கரை கே.ஜி.காலனியில்  நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் பிடிக்க மூன்று பேர் கொண்ட தனிப்படை போலீஸார்  பழனிக்கு சென்றனர். இந்த நிலையில் போலீசார் குற்றவாளிகளை நெருங்கியபோது போலீசார் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் எஸ் ஐ ஆறுமுக நயினார் முகத்தில் தாடை பகுதியில் பலத்த வெட்டுக்காயம் எற்பட்டது.  இதனையடுத்து அங்கு உள்ள தனியார் மறுத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையேகோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி குற்றவாளிகள் தாக்கியதில் படு காயம் அடைந்த எஸ்ஐ ஆறுமுகநயினாறை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார் பின்னர் அந்த சம்பவம் குறித்தும் குற்றவாளிகளின் பின்னணி குறித்தும் கூடுதல் தகவல்களை கேட்டறிந்தார். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த நபர்களையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி உடனடியாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!