கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..

இன்று (27/02/2019) C3-S.S.காலனி ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் மதுரை டவுன், பைபாஸ் ரோடு அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன் 38/19, த/பெ.ராமச்சந்திரன் என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன்-1 மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.600/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்