மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல். வாலிபர் கைது..

மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளுக்கு விமான‌‌ சேவை உள்ளது. சுங்க இலாகாவினர் சோதனை செய்த பிறகே பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர்.

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது.பயணம் செய்யும் பயணிகளை மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

சிங்கப்பூருக்கு செல்ல இருந்த தூத்துக்குடியை சேர்ந்த பார்வதிநாதன் (வயது 46) என்பவரை சோதனை செய்தபோது அவரது பையில் யூரோ, சிங்கப்பூர் டாலர், புருனே, மலேசியா நாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.44 லட்சம்.

சுங்க இலாகா அதிகாரிகள் பார்வதிநாதனை பிடித்து பெருங்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.