மதுரை மாவட்டம் செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி., இவரது கணவர் செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் போது உயிரிழந்த நிலையில் அவரது வாரிசு வேலை பரமேஸ்வரிக்கு கிடைத்துள்ளது., அதன் அடிப்படையில் பரமேஸ்வரி பழங்காநத்தம் அரசு போக்குவரத்து பணிமனையில் சமையலராக பணியாற்றி வருகிறார்.,இந்நிலையில் கணவர் இறந்த சில ஆண்டுகளிலேயே அதே பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த தேங்கல்பட்டியைச் சேர்ந்த சிவன்காளை என்பவருடன் திருமணம் தாண்டிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.,முதல் கணவருக்கு பிறந்த அவரது மகள் சிவரஞ்சனியை திருமணம் முடித்து கொடுத்துவிட்ட சூழலில்., தாய் பரமேஸ்வரிக்கு சொந்தமான வீடு மற்றும் சொத்துக்களை அவருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வரும் சிவன்காளையின் மகனுக்கு எழுதி கொடுக்க உள்ளதாக தெரிந்து தனக்கு சொந்தமான சொத்துக்களை யாருக்கும் கொடுக்க கூடாது என மகள் சிவரஞ்சனி அடிக்கடி தாய் பரமேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.,கடந்த 10ஆம் தேதி தேங்கல்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்க சொல்லி வீட்டிற்கு வந்து சிவரஞ்சனி பிரச்சினை செய்த போது எழுதி தர முடியாது என பரமேஸ்வரி தெரிவித்தாக கூறப்படுகிறது.,இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி மற்றும் சிவரஞ்சனியின் கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன், மதனகோபால், அழகுபாண்டி உள்ளிட்டோர், பரமேஸ்வரி வீட்டிற்கு சென்று அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.,இந்நிலையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த பரமேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தனது தாய் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடி அனைவரையும் சிவரஞ்சனி நம்ப வைத்தாக கூறப்படுகிறது.,மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிய நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திலகராணி தலைமையிலான போலீசார் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜீ மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.,விசாரணையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் யார் யார் பரமேஸ்வரியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்., என ஆய்வு செய்த போது சிவரஞ்சனி மற்றும் அவரது கணவர் மற்றும் கூட்டாளிகள் வந்து சென்றது கண்டறியப்பட்டது., 5 பேரிடமும் நடத்திய விசாரணையின் போது கழுத்தை நெரித்து படுகொலை செய்தததை ஒப்புக் கொண்டுள்ளனர்., மகள் மருமகன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,சொத்து பறிபோய்விடுமோ என அஞ்சி பெற்ற தாயை சொத்திற்காக மகள் மருமகன் கூட்டாளிகள் உதவியுடன் படுகொலை செய்த சம்பவம் பகுதியில் பெரும் செக்காணூரணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.