பரமக்குடி அருகே வாலிபரை வெட்டிக்கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம்..

இராமநாதபுரம்,  அக் 31 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்விரோதம் காரணிமாக வாலிபரை ஓட, ஓட விரட்டி கொலை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி மகன் ஹரிஷ் (எ) வாணி கருப்பு, 25. எமனேஸ்வரம் வைகை நகரில் வசிக்கும் உரப்புளி அருகே கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நிதீஷ் 24. இருவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் செப்.16ஆம் தேதி பரமக்குடி வைகை ஆற்று பகுதியில் ஹரீஷை வழிமறித்து நித்திஷ், இவரது நண்பர்கள் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக ஹரிஷ் தாயார் பொன் செல்வம் புகாரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்திஷை கைது செய்தனர். தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்த நித்திஷை ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை பரிந்துரையில் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவில் குண்டர் சட்டத்தில் நித்திஷை பரமக்குடி நகர் போலீசார் இன்று கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.