
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மனைவி வயது 23 இவருக்கு திருமணமாகி 15நாட்கள் ஆகிறது. அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் வயது 38 அந்தப் பெண்ணின் கணவர் ஆறுமுகம் சுகுமார் இருவரும் நண்பர்கள் இன்று காலை வீட்டில் வெளியே மது அருந்திவிட்டு கஞ்சா போதையில் இருந்துள்ளனர். பின்பு ஆறுமுகம் வெளியில் செல்ல வீட்டுக்கு வெளியே மது, கஞ்சா போதையில் இருந்த சுகுமார் புதுப் பெண்ணான ஆறுமுகத்தின் மனைவியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதனால் மயக்கம் அடைந்து கீழே விழுந்த இளம் பெண்ணே அருகில் இருந்த சிறுவன் கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். தப்பிக்க வழியின்றி நின்ற சுகுமாரை அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்பு அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் சுகுமார கைது செய்து விசாரணை நடத்தி அத்துமீறி வீட்டில் நுழைந்து, பாலியல் வன்புணர்ச்சி செய்ததும் 376,448 என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.