சிவகாசியில் பட்டப்பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன் கைது..

சிவகாசியில் பட்டப்பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி இந்திரா நகரில் வசிக்கும் தம்பதியினர் சரவணகுமார்( 25) ஜெயலட்சுமி (22)இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆன நிலையில் கயல் என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது சரவணகுமார் பட்டாசு தொழிற்சாலையில் ஓட்டுனர் ஆகவும் ஜெயலட்சுமி பட்டாசு தொழிற்சாலையிலும் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவண குமார் தனது மனைவி ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு அடிக்கடி தொடர்ந்து தகராறு நடந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் குடும்ப பிரச்சனை முற்றவே ஆத்திரமடைந்த சரவணகுமார் வீட்டின் பின்புறம் வைத்து தன் மனைவி ஜெயலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தி கொலையான ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் மனைவியை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய சரவணகுமார் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப் பட்டி கண்மாயில் மறைந்து இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் கணவனே மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..