கூடுதல் எஸ்.பி., பெயரால் ரூ.2.80 லட்சம் வசூல்: இருவர் கைது..

இராமேஸ்வரத்தில் முறைகேடாக மது விற்க கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரைக்கு பணம் கொடுக்க வேண்டும், என பல்வேறு நபர்களிடம் ரூ.2.80 லட்சம் வசூலித்தவரையும், பணம் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இராமேஸ்வரத்தில் மதுக்கடை இல்லாததால், அங்கு அனுமதியின்றி முறைகேடாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் போலீசார் சோதனை நடத்தியதில் 3 ஆயிரம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சிலரை கைது செய்தனர். சிலர் தலைமறைவாகினர்.

முறைகேடாக மதுபானம் பிரச்னையில்லாமல் விற்பனை செய்ய கூடுதல் எஸ்.பி.,க்கு பணம் கொடுக்க வேண்டும், என பாம்பன் மெய்யம்புளி கிராமத்தை சேர்ந்த முருகன்,42, என்பவர்பாம்பனை சேர்ந்த மோகன் என்பவரிடம் 1.60 லட்சம் கேட்டுள்ளார். இந்த பணத்தை கொடுக்க வந்த மோகனையும், முருகனையும், போலீசார் கைது செய்தனர். முருகன் வசூலித்த 2.80 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, சம்பந்தபட்ட நபர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

#Paid Promotion