கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது..

20.03.2019 ம் தேதி E2-மதிச்சியம் (ச&ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கருணாநிதி என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று மதுரை டவுன் வைகை வடகரை அருகில் இரண்டு நபர்கள் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணை செய்த போது மதுரை மாநகர் ஆழ்வார்புரத்தை சேர்ந்த மூன்று நபர்களான முருகன் என்பவரது மகன் குமார் 23/19, சாகுல் ஹமீது மகன் மைதீன்கனி 21/19, மற்றும் சுப்பையா சேர்வை என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் அஜித் 23/19, என விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN 01 AC 7816 – பல்சர் இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்