Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் கஞ்சா விற்றவர்கள் கைது …

மதுரையில் கஞ்சா விற்றவர்கள் கைது …

by ஆசிரியர்

இன்று (15/03/2019) B4-கீரைத்துறை ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராமலிங்கம் அவர்கள் மதுரை புது மாகாளிபட்டி ரோடு அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை மணிகண்டன் நகரை சேர்ந்த ராமமூர்த்தி 37/19, த/பெ.அழகர்சாமி என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய PASSION PRO-TN64 Q9624 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

அதே போல் நேற்று (14/03/2019)  D1-தல்லாகுளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.மணிக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை பெற்று மதுரை டவுன், காந்தி மியூசியம், இராஜாஜி பூங்கா அருகே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரைச் சேர்ந்த ராஜா 44/19, த/பெ. ஆறுமுகம் என்பவர் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.2000/- கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com