நிலக்கோட்டை அருகே கார் திருட முயன்ற வாலிபர் கைது…

நிலக்கோட்டை மார்ச் 11 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குண்டல பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் முத்துமணி வயசு 53. இவர் திண்டுக்கல் ,மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதி சென்று கவரிங் செயின் மற்றும் வளையல் போன்ற வியாபாரம்  செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வியாபாரத்திற்காக பயன்படுத்தக்கூடிய காரை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.. இந்த காரை நேற்றுமுன்தினம் இரவு  (சனிக்கிழமை இரவு) அதே ஊரைச் சேர்ந்த நாகராஜ் மகன் விக்னேஷ் குமார் வயது 22 என்பவர் காரை திருடி உள்ளார்.. அப்போது சத்தம் கேட்டு எழுந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் விக்னேஷ் குமார் கை, களவுமாக பிடித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் . நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் குமாரை கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட் மாஜிஸ்திரேட் ரிஸ்னா பர்வீன் முன்னிலையில் ஆஜர் படுத்தினார்.

இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சிறையில் விக்னேஷ்குமார் அடைக்கப்பட்டார். படவிளக்கம் காரைத் திருடிய விக்னேஷ் குமார் படத்தில். காணலாம்.