சஸ்பெண்டு செய்யப்பட்ட காவலர்.. கைது செய்யப்பட்டார் ..

இராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மேலசோத்தூரணியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராஜ்குமார், 30. சிறப்பு காவல் படை போலீஸ்காராக புதுடில்லியில் பணியாற்றிய இவர் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இவர் அதே பகுதியைச் ராமு மகள் பஞ்சவர்ணத்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இணக்கமாக இருந்தார். மேலும் பஞ்சவர்ணத்திடமிருந்து ஒரு பவுன் செயின், ரூ.80 ஆயிரம் வாங்கியுள்ளார்.

தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக ராஜ்குமார் மீது இராமநாதபுரம் மகளிர் போலீசில் பஞ்சவர்ணம் புகார் கொடுத்தார். இதன்படி ராஜ்குமாரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலாராணி கைது செய்தார்.