Home செய்திகள் ஆபீசுக்கு வர’ஆரோக்கிய சேது’ கட்டாயம்: ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

ஆபீசுக்கு வர’ஆரோக்கிய சேது’ கட்டாயம்: ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

by Askar

ஆபீசுக்கு வர’ஆரோக்கிய சேது’ கட்டாயம்: ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

‘மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை, தங்கள் மொபைல் போன்களில் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.டில்லியில், நேற்று முன்தினம், நிதி ஆயோக் எனப்படும், மத்திய திட்டக்கமிஷனின் உயர் அதிகாரிக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு, அந்த அலுவலகம், ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில், பீதி ஏற்பட்டுள்ளது. பதிவிறக்கம்இதையடுத்து, மத்திய பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம், நேற்று அதிரடியாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உயர் அதிகாரிகளில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, அனைவருமே, ஆரோக்கிய சேது செயலியை, தங்கள் மொபைல் போன்களில், கண்டிப்பாக பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

 வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பும் முன், அந்த செயலி மூலம், அப்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வலியுறுத்த வேண்டும்’பாதுகாப்புக்கு உத்தரவாதம் அல்லது குறைந்த அளவிலான ரிஸ்க்’ என்ற நிலை இருந்தால் மட்டுமே, பயணத்தை துவங்க வேண்டும்.’ஓரளவு அபாயம்’ என்றோ, ‘அதிக அபாயம்’ என்றோ தெரிய வந்தால், கண்டிப்பாக அலுவலகத்திற்கு வரக்கூடாது. இவற்றை, அந்தந்த அமைச்சகங்களின், இணைச்செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, கண்காணித்து பொறுப்புடன், வழிநடத்த வேண்டும். இந்த உத்தரவு, பிரதமர் அலுவலகம், மத்திய அரசின் செயலகம் ஆகியவற்றில், உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும்.இந்த உத்தரவை, அமைச்சகங்கள் மட்டுமல்லாது, மத்திய அரசின் கீழ் வரும், தன்னாட்சிபெற்ற உயர் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்துமே, தங்கள் ஊழியர்களுக்கு, தனி சுற்றறிக்கை மூலம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.செயலியின் பயன்கொரோனா தொற்று, சமூக பரவலாக மாறும் அபாயத்தை தடுப்பதற்காகவும், அந்த பரவலின் சங்கிலித் தொடரை உடைக்கவும், ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலி, ‘ப்ளூ டூத்’ தை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் போனின் வளையத்துக்குள் வரும், பிற மொபைல் எண்களை பரிமாறிக் கொள்ளும்.இந்த செயலியுடன் பயணிக்கும் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக, அவரது மொபைல் எண் அருகில் வந்து சென்ற எண்களை கொண்ட அனைவரையுமே கண்டறிந்து, தனிமைப்படுத்த உத்தரவிட முடியும்.

செய்தித் தொகுப்பு,வழக்கறிஞர் எம்.சுனில்முத்து.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!