Home செய்திகள் அரியலூரில் மடிக்கணிணி வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

அரியலூரில் மடிக்கணிணி வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

by mohan

அரியலூர் துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மடிக்கணிணி வழங்கப்படாததை கண்டித்து 22-07-2019 காலை 10 மணி முதல் திட்டக்குடி அரியலூர் பிரதான சாலையில் துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த போராட்டத்தில் இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்பட்டதாகவும் இதற்கு முன்பு படித்த மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.மேலும் உடனடியாக மடிக்கணிணி வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தினர்.இந்த சாலை மறியலில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.சாலை மறியல் போராட்டம் 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.

இந்த போராட்டத்தை முடித்து வைப்பதற்காக சமரச பேச்சுவார்த்தை நடத்த துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி அவர்களும், குன்னம் துணை ஆய்வாளர் கோகிலா அவர்களும் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடனடியாக உங்களுக்கு மடிக்கணிணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு தேவையான லேப்டாப் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததன் பேரில் உறுதிமொழியை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் விடுபட்டுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் உடனடியாக மடிக்கணிணி வழங்கப்பட வேண்டும். அதே நேரம் மாணவர்கள் போராடி பெற வேண்டிய அவலநிலை தொடராமல் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு அப்பகுதி சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!