தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் அக்.29, 30 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிளான காவல் துறை மாநாட்டில், தேசிய அளவில் தமிழ்நாடு காவல் துறை ‘ஆன்லைன்” தொடர்பு, ‘மொபைல் ஆப்ஸ்”,CCTNS மற்றும் காவல் துறை வலைதளங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி பலவித குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது தொடர்பாக, தமிழ்நாடு காவல் துறை கூடுதல், இயக்குநர் மாநில குற்ற ஆவண காப்பம் (SCRB) சீமா அகர்வால் இராமநாதபுரம் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தின் (DCRB) கீழ் பணிபுரிந்து வரும் தலைமை காவலர்கள் செந்தில்குமார் (HC 828) ஆனந்தவேல், (HC 924) முத்துகிருஷ்ணன் (HC 643) ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
இது தொடர்பாக பாராட்டு சான்றிதழ் பெற்ற 3 தலைமை காவலர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா காவல் பாராட்டி கௌரவித்தார். ராமநாதபுரம் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூட சார்பு ஆய்வாளர் ம. அ.துரைராஜ் உடன் உள்ளார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.